Posts

Showing posts from 2020

நிதர்சனம்

சிலரது ஆடம்பரங்கள் பலரது அத்தியாவிசயங்கள் சிலரது அத்தியாவிசயங்கள் பலரது அதிசயங்கள் 

பார்வை

மொழியில்லை ஒலியில்லை எழுத்தில்லை அர்த்தங்களுக்கு அளவில்லை 

வானத்தின் காதல்

வானத்து காதலனின் வெண்காதல் அம்புகள் பூமி காதலியின் இதயம் துளைத்து பச்சை கோடி காட்டுகிறதே இயற்கை வளங்களாக !

மழை

முகில் மழலைகளின் துள்ளாட்டம் பூமியின் மேல் கொண்டாட்டம் 

தென்றல்

இறகுபோல் வருடுகிறாய் இதமாக குளிர்கிறாய் செவிகளில் ஒலிக்கிறாய் கவலைகள் குறைகிறது காற்றில் கறைகிறது காலங்கள் மறைக்கிறது

நட்சத்திரங்கள்

கரும் பட்டாடையில் வைர கிழிசல்கள் ! கரும் கூந்தலில் வெண் முல்லைகள்! கார் கடலில் வெண் முத்துக்கள் !

கண்கள்

கருப்பு வானத்தில் வெள்ளை நிலா - வானம் வெள்ளை வானத்தில் கருப்பு நிலா - கண்கள் 

சிறுமலர்

சிறுமலரே நீ சிறகில்லாமல் பறக்கிறாய் உன் நறுமணத்தால் உத்தரவில்லாமல் உள்ளே வந்தாய் உள்ளத்தில் மகிழ்ச்சியின் மணம்